Kogilavani / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
நாடளாவிய ரீதியில் 1,000 ஏற்றமதிக் கிராமங்கள் மற்றும் 4 ஏற்றுமதி வலயங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.
பெருந்தோட்ட அதிகார சபைகள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுடனான கலந்துரையாடல், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் மாலனிலொகு போதாகமவின் ஏற்பாட்டில், நேற்று (10) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், 'நாட்டில் ஆடைகள் உட்பட சில ஏற்றுமதி வலயங்கள் காணப்படுகின்றன. ஆனால், பெருந்தோட்டப் பயிர்களுக்கான ஏற்றுமதி வலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டில் பெருந்தோட்டப் பயிர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், அவற்றை உற்பத்திசெய்யும் தரப்பினருக்கு உந்துசக்தி வழங்கி அவர்களது வருமானங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த ஏற்றுமதி வலயங்களை அமைக்கவுள்ளோம்' என்றார்.
முதலாவது வலயம் காலியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஏற்றுமதி வலயங்களை இரத்தினபுரி, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றம் தெரிவித்தார்.
'அத்துடன் நாடளாவிய ரீதியில் 1,000 ஏற்றுமதி கிராமங்களை அமைக்கவும் இதன்மூலம் கிராமிய மக்களின் உற்பத்திகளுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் வழியேற்படுத்தப்படுகிறது' என்றும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago