2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

1,123 கி.மீ. வீதிகளை புனரமைக்க அனுமதி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 1,123 கிலோ மீற்றர் வீதிகளை புனரமைப்பதற்கு, நெடுஞ்சாலைகள் அமைச்சு வழங்கியுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியா தொலைநோக்கு அபிவிருத்தியின் கீழ் தோட்டப் பகுதிகளிலுள்ள 1,123 கிலோ மீற்றர் வீதிகளைப் புனரமைப்புக்க அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரின் ஏற்பாட்டில் தோட்ட பாதைகள் புனரமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன், வெகு விரைவில் தோட்ட பாதைகள் புனரமைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்றும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X