Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 29 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து 840,000 ரூபாய் பெறுமதியான No. 1 டஸ்ட், தேயிலை தூள் 60 கிலோ கிராம் நிறை கொண்ட 1,200 கிலோ கிராம் அடங்கிய 20 பொதிகள் கடந்த 23 ம் திகதி களவாடப்பட்டுள்ளது என தோட்ட முகாமையாளர் நிலுஷான் மதுசங்க ஜயவீர , மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்த பட்டு இருந்த சீ.சீ.டி வி கெமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..
23.07.2025.அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் தேயிலை தூள் அடங்கிய 20 பொதிகள் தோட்ட உதவி முகாமையாளரால் லொறிக்கு ஏற்றப் பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்
ஹட்டன் நீதிமன்ற நீதிவான் அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .