2026 ஜனவரி 21, புதன்கிழமை

1.5 மில்லியன் பேர் தொழில் வாய்ப்பை இழந்தனர்

R.Maheshwary   / 2021 ஜூலை 11 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உமா மகேஸ்வரி

திருமணங்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெறாமைக் காரணமாக, நாட்டில் 1.5 மில்லியன் பேர், நேரடியாக தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும், குறிப்பாக பூக்கள் விநியோகிப்பவர்கள், வாகன வாடகைக்கார்ர்கள், கேக் உற்பத்தியாளர்கள், திருமண ஆடை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 3 மில்லியன் பேர் தமது வருமானங்களை இழந்துள்ளனர் என, இரத்தினபுரி மாவட்ட திருமணம் மற்றும் மங்கள சேவை வழங்குனர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசேகர தெரிவித்தார்.

குருவிட்ட கிரேண்ட் கார்டியன் ஹோட்டலில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களைச் சேர்ந்த அதிகமான இளைஞர்கள் உரிய பயிற்சிகளைப் பெற்று, ஹோட்டல்துறைகளில் பல்வேற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் இவர்கள் வருமானமின்றி கஸ்டப்படும் நிலையில், மீண்டும் திருமண நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை, மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்கள் உள்ளிட்ட உற்சவ மண்டபங்கள், ஹோட்டல்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X