2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

R.Tharaniya   / 2025 நவம்பர் 24 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

குறித்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்  ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது,

இவ் விபத்து இடம்பெற்றதற்கான காரணம் கன மழை மற்றும் அடர்ந்த மூடு பனியினால்   வீதி தெளிவில்லாததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக என்று ஓட்டுநர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் குறித்த சம்பவம்  தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எஸ் சதீஸ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X