2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

100 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து; சாரதி பலி

Kogilavani   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், துவாரக்ஷான்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊவாக்கலைப் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி மரணமடைந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் மவுசாகலை பகுதியைச் சேர்ந்த  மோகன்ராஜ் முரளிதரன் வயது (32) என்பவரே உயிரிழந்துள்ளார். 

நாகசேணை மவுசாகலை கீழ்ப் பிரிவிலிருந்து, ஊவாக்கலை நோக்கிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதி அபிவிருத்திப் பணிக்கான பொருட்களை ஏற்றிச் செல்லும்போதே லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X