2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

’126 பாடசாலைகளை அடிமைப்படுத்த முடியாது’

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் 126 பாடசாலைகளில், போதைப் பொருள் பாவனைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் உள்ளடங்குவதாக, கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு, குறைந்தது ஒரு மாதகாலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார.

மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்பு தொடர்பான விசேட குழுவின் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதை என்ற மாயையில் வீழ்ந்து, எதிர்கால சந்ததியினர் மடிவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அதற்காக 126 பாடசாலைகளை விட்டுவைக்க முடியாது என்றும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இதை ஒழிப்பதற்கு,  ஒரு மாதகாலத்துக்குள் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸார் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களதும் உதவிகள் இதற்காகப் பெறப்பட வேண்டும் என்றும் கூறிய அவர், ஆளுநர் என்ற வகையில் தம்மால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .