2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

12ஆவது நடமாடும் சேவை அம்பகமுவயில்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார் 

நுவரெலியா மாவட்டத்தின்  2022 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது நடமாடும் சேவை அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்றுமுன் தினம் (20) நடைபெற்றது. 

இதற்கமைய, அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவின்  ஹிட்டிகே, ஹகரபிட்டிய ,மினுவந்தெனிய, ஜம்புதென்ன, கொட்டேல்லென ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக  இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் பணிப்புரையின் கீழ் அம்பகமுவ. பிரதேச செயலாளர் திருமதி சிதாரா கமகே தலைமையில் நடைபெற்ற  இந்த நடமாடும் சேவையில், வயது முதிர்ந்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கல், பிறப்பு, இறப்பு  சான்றிதழ் வழங்குதல், திருமணங்களைப் பதிவு செய்தல், பாடசாலைக்கு செல்லாத குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புதல், உள்ளிட்ட பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .