2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

13,14 வயதில் திருமணம்:சிறுமிகளும் இளைஞர்களும் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                    (எம்.எம்.எப்.தாஹிர்)

போலி வயதைக் கூறி, சிறு வயதில் விவாகம் செய்துக் கொண்ட இரு திருமண ஜோடிகளையும், அவர்களுக்கு சாட்சியாக ஒப்பமிட்ட சாட்சியாளர் மற்றும் போலி வயதை நிரூபித்து சத்தியக் கடதாசி வழங்கிய சமாதான நீதவான் உள்ளிட்டவர்களை பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு இன்று திங்கட்கிழமை பண்டாரவளையில் வைத்து கைது செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளில்  ஒருவரின் உண்மையான வயது 13 வயதும் 6 மாதங்களும் மற்றையவரின் வயது 14 வயதும் 11 மாதங்களும் ஆகும். இவர்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்களின் வயது 20 ஆகும்.

குறித்த சிறுமிகளுக்கு 19 வயது என சமாதான நீதவான் ஒருவர் வழங்கிய சத்தியக் கடதாசியின் பிரகாரம் இவர்களுக்கான திருமணப் பதிவை திருமண பதிவாளர் மேற்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

குறித்த சிறுமிகள் பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்களாவர். இது தொடர்பில் கொழும்பிலிருந்து வந்த பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு இவர்களை இன்று கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சிறுமிகள் இருவரும் சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்படுவதுடன் ஏனைய நால்வர் இன்று மாலை பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இன்னும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .