Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
15 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த சிங்கராஜ வனத்தின் 2 யானைகள், இரத்தினபுரியின் கிராம எல்லைகளிலும் வீதிகளில் நடமாடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கராஜவனத்தை ஆக்கிரமித்து இந்த யானைகள் அட்டகாசம் செய்து வந்ததாகவும் இதனாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் இப்பகுதியில் நிலவிய வானிலை மாற்றங்கள் காரணமாக, இந்த இரண்டு யானைகளும், வனத்தின் உற்பகுதிக்குள் சென்றிருந்ததாகவும் எனினும் வரட்சியான வானிலை ஆரம்பித்தையடுத்து, தற்போது வனத்திலிருந்து வெளியேறிவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவை, பெரும்பாலும், பொத்துபிட்டிய, இறக்குவானை வீதிகளில் நடமாடுவதாகவும் எனவே, பொதுமக்களும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஒரு யானையின் கழுடத்தில், டிஜிட்டல் இலக்கம் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம், யானைகள் இருக்கும் இடத்தை, எந்த நேரத்திலும் இலகுவாக இனங்காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
30 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago