2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

150 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

150 மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொகவந்தலாவைப்  பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்பியன் நரிலிருந்து கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு செல்லும்போதே கடமையிலிருந்த பொலிஸார், 175 மில்லி லீற்றர் மதுபானப் போத்தல்கள் 150 ஐக்  கைப்பற்றியுள்ளனர்.

தோட்டப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இவ் மதுபான போத்தல்களைக் கொண்டு சென்றதாகத்  தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்ப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன்,அவர் மீது வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X