Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுற்றாடல் சுத்திகரிப்பு திட்டத்துக்கிணங்க, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களையும் 24 மணித்தியாலங்களும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்தார்.
சுற்றாடல் அலங்காரம், பாதுகாப்பு தொடர்பாக, இரத்தினபுரி மாவட்ட அரச உத்தியோகத்தர்களை அறிவுறுத்தும் விசேட கூட்டம், இரத்தினபுரி மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின், நாட்டு மக்களின் நலன் கருதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனையில் உருவான இத்திட்டம், ஒரு விசேட கருமமாக கருதப்படுவதாகவும் இப்பணியை 24 மணித்தியாலங்களிலும் மாவட்டம் முழுவதும் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, இத்திட்டத்துக்கிணங்க, இரத்தினபுரி மாநகர சபையின் சுத்திகரிப்பு கண்காணிப்புக்காக, சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்கள் சுத்திகரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 5 பேரும் என, மொத்தம் 80 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
இவர்கள், 24 மணித்தியாலங்களிலும் உள்ளூராட்சி சபைக்குட்பட்ட பிரதேசங்களின் சுத்திகரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறுகின்றனவா என்பதனைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .