2025 ஜூலை 23, புதன்கிழமை

174 கிலோகிராம் ஆட்டிறைச்சியுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

அனுராதபுரம், கெகிராவ பிரதேசத்திலிருந்து கண்டி, அக்குறணைக்கு லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்பட்ட 174 கிலோகிராம் ஆட்டிறைச்சியுடன் இருவரை, மாத்தளை பொலிஸார், செவ்வாக்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, உக்குவலை, மாபேரிய வீதி வழியாக, புத்தரின் திருவுருங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கருடன் பயணித்த லொறியை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார், ஆட்டிறைச்சியுடன் மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, ஆடுகள் பலவற்றின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .