2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

18 வருடங்களாக மூடப்பட்டுள்ள சுகாதார நிலையம்

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில்,  பூஜாபிட்டிய பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள சுகாதார நிலையமொன்று, சுமார் 18 வருடங்களாக மூடப்பட்ட நிலையில் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு, ஆண்டு மாரச் மாதம் 10ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள இந்த சுகாதார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பண ஒதுக்கீட்டை, மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வழங்கியிருந்தார்.

இச்சுகாதார நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே செயற்பட்டு வந்தது என்றும் அதன் பின் சுமார் 18 வருடங்களாக இது மூடப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சுகாதார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான காணியை, பிரதேசவாசி ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதாகவும் இந்நிலையம் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதால், அக்காணியும் எந்தவொரு பயன்பாட்டுக்கும் உட்படாமல் இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, இந்த சுகாதார நிலையத்தை புனர்நிர்மாணம் செய்து, பிரதேச மக்களின் தேவைகளுக்கு வழங்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X