Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் ஓட்டி சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகளை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று காட்சிகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் (டிக்-டாக்) பரவி வரும் வீடியோவை முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் பதிவேற்றம் செய்து, அந்த காட்சிகளை பதிவிறக்கம் செய்து, முச்சக்கரவண்டியின் பதிவு எண்கள் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரு இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம மற்றும் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago