Editorial / 2023 ஜூலை 18 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகள் வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளன.
மஸ்கெலியா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனியார் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகளை கடந்த 17ஆம் திகதி பிடித்து நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் தோட்ட தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.
ஒரு மாத வயதுடைய இரண்டு சிறுத்தை குட்டிகளை தேயிலை தோட்டத்தில் பாதுகாப்பான இடத்துக்கு தாய் கொண்டு வந்ததையடுத்து தாய் இரை தேட சென்றுள்ளது.
இதன் போது தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் இரண்டு சிறுத்தைக் குட்டிகளை பார்த்து தோட்ட முகாமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தோட்ட முகாமைத்துவம், நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள். ரன்தெனிகல கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் கால்நடை வைத்தியரின் ஆலோசனைக்கமைய தொழிலாளர்களின் பராமரிப்பில் இருந்த இரண்டு பகுட்டிகளும் தாயாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேயிலை தோட்டத்தில் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகளையும் மக்கள் பிடித்து தொட்ட பிறகு தாய் ஏற்க மறுப்பதால், புலிக்குட்டிகள் இருந்த இடத்திலேயே தங்கி வாழ வாய்ப்பு அளித்து உயிர் காக்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரை தேடும் சிறுத்தைக் குட்டிகளின் தாய் அந்த இடத்துக்கு திரும்பி வந்து தனது குட்டிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்
39 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago