Freelancer / 2023 மே 18 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில்
13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து
விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் 17.05.2023. புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றதோடு
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் சித்தப்பா பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த
தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் உள்ள அவரது
சித்தப்பாவின் வீட்டுக்கு குறித்த நபர் நேற்றைய தினம் வந்திருந்த போது, குறித்த வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும், விழுந்து உயிரிழந்தவர் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மும்மூர்த்தி ரஞ்சன் என பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபரை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு
கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டனில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை அரம்பித்துள்ளதோடு ஹட்டன் நிதீமன்ற பதில் நீதவான் நாராயணன் பாத்தீபன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.


11 minute ago
34 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
39 minute ago
49 minute ago