Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர் வரும் பண்டிகை காலத்தையொட்டி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் அதிகூடிய விலைக்கு முட்டைகளை விற்பனைச்செய்த குற்றச்சாட்டின் கீழ் 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனநுகர்வோர் சேவை அதிகாரியின் நுவரெலியா மாவட்ட காரியாலய பொறுப்பதிகாரி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.
அவர்களை, நுவரெலியா மற்றும் ஹட்டன் நீதவான் நீதி மன்றங்களில் ஆஜர் படுத்திய போது, குற்றங்களை ஒப்புக்கொண்டமையால் அவர்களிடமிருந்து 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், முட்டைகளை பதுக்கிவைத்திருந்த வர்த்தகர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2,000 முட்டைகள் நீதி மன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026