Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 21 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன், லக்க்ஷபான தோட்டத்தில் சுமார் கடந்த 200 ஆண்டு காலமாக பாட்டன், பாட்டி, தாத்தா, அம்மாய், தந்தை, தாய் பிள்ளைகள் என நான்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 198 வருடமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மரணம் அடைந்தால் அவர்களுக்கான இறுதி கிரியைகள் நடத்த இலகுவான இடம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அந்தத் தோட்டத்தை பொறுப்பேற்றவர் கூட அதே இடத்தில் இறுதி கிரியைகள் நடத்த எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போதைய நிர்வாகம் அந்த இடத்தில் இறுதி கிரியைகளை நடத்த கூடாது என கூறியது. கடந்த வருடம் பெண் தொழிலாளி ஒருவர் மரணித்த போது காலம் காலமாக இறுதி கிரியை செய்த இடத்தில் செய்ய வேண்டாமெனக் கூறியது. எனினும், நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிப்புரையின் பேரில் உரிய இடத்தில் அப்பெண்ணுக்கான இறுதி கிரியைகள் நடந்தன
இந்நிலையில், அத் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் சனிக்கிழிமை (20) மரணித்தார். அவரது குடும்பத்தினர் இறுதி கிரியை செய்ய குறித்த இடத்தை தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது, அவ்விடத்தை வழங்க மறுப்பு தெரிவித்து வேறுறொரு இடத்தில் இறுதி கிரியைகளை நடத்த கூறினர்.
அவ்வாறு வழங்கப்பட்ட இடம் வெகு தூரத்தில் உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் சார்ந்த தொழிற் சங்க தலைவர் செல்லையா சிவசுந்தரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் இது தொடர்பாக தோட்ட முகாமையாளர், அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வலய பொலிஸ் அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
நீண்ட தூரம் உள்ள ஓர் இடத்தில் புதைக்குழி தோண்டி இங்கே இறுதி கிரியைகள் செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகம் பணித்து உள்ளதாக அத் தோட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால், சடலத்தை குறித்த நேரத்தில் அடக்கம் செய்ய செய்ய முடியாத நிலை, உறவினர்களுக்கு ஏற்பட்டது. எனினும், லிஸாரின் பணிப்புரையின் பிரகாரம் புதிய இடத்தில் இறுதி கிரியைகளை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
200 வருடம் அதே தோட்டத்தை பரம்பரை பரம்பரையாக கொண்ட தொழிலாளர்களுக்கு இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது என அங்குள்ள மக்கள் அங்கலாய்க்கின்றனர். அந்தத் தோட்டத்தில் தற்போது 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
3 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
35 minute ago
2 hours ago