Freelancer / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையக மக்களின் வரலாறு 200 வருடங்கள் கடந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் வாழ்வாதாரமும் பின்தங்கிய நிலையில் இன்னமும் காணப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மலையக மக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல் புறம் தள்ளி வைக்கப்படுகிறார்கள் . நாடு தற்பொழுது பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளது இந்த சந்தர்ப்பத்திலும் கூட பெருந்தோட்ட துறையை சார்ந்தவர்களே அந்நிய செலாவணி பெற்றுக்கொடுக்கின்றனர்.
மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மக்களின் ஆணையை பெறாத ரணில் விக்ரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
பதவியினை ஏற்று ஒரு வருடங்கள் கடந்துள்ள போதும் தோல்வியினை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த இந்த அரசாங்கம் பயந்த நிலையில் உள்ளது என்றார்.
மக்கள் மத்தியில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமானால் நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறவேண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது அது சொற்ப விலையில் குறைக்கப்பட்டுள்ளது டொலரின் விலை குறைந்தாலும் மக்கள் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர் நாட்டில் தற்பொழுது யுத்தம் மற்றும் பயங்கரவாதம் இல்லாத காலப்பகுதியில் இந்த அரசாங்கம் புதிதாக பயங்கரவாத தடைசட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களையும் சமுக ஊடகங்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026