Janu / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளாந்தம் 2000 ரூபாய் வேதனத்தை கோரி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு எதிராக மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் வியாழக்கிழமை (18) அன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டமானது அரசுக்கு எதிராக இல்லை என்றும், இது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உரிமை ஆர்ப்பாட்டம் எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய அரசு முதலாவது பாதீட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவதாக கூறியே ஆட்சி பீடம் ஏறினார்கள் இருந்த போதிலும் இரண்டாவது பாதிட்டு வாசிப்பு இன்றைய ஜனாதிபதி வாசிக்க உள்ள நேரத்தில் இன்றைய விலைவாசிக்கு ஏற்ப 2000 ரூபாய்க்கு மேல் வேதனை வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து சுமார் முன்னூறுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செ.தி.பெருமாள்


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago