2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மலையக மக்களின் வாசிப்புத் திறன் குறைந்து விட்டது:அந்தனி ஜீவா

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹமட் ஆஸிக்)

மலையகத்தில் பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா எழுதிய கொழுந்து சஞ்சிகை கண்டி இந்து காலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

அங்கு உரை நிகழ்த்திய சஞ்சிகையின் ஆசிரியர் அந்தனி ஜீவா, பாதைகளை வெட்டி பயணம் செய்ய வேண்டிய நிலையில் இன்று மலையக இலக்கியவாதிகள் நெருக்கடி நிலைக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.

மலையக மக்களின் வாசிப்புத்திறன் மிகக் குறைந்து விட்டது. வாசிப்பதே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. ஒப்பிட்டளவில் இலக்கியம் மொழி ஆகிய துறைகளில் ஏனைய சமூகங்களைவிட நாம் மிக பின்தங்கிவிட்டோம்.

பாடசாலை மட்டத்தில் மொழி வளர்க்கப்படுவது குறைந்து விட்டது. வாசிப்பும் இல்லை தமிழ் மொழி வளர்க்கப்படுவதுமில்லை என்றால் இலக்கியவாதிகளால் என்ன செய்யமுடியும்? நாமே பாதை வெட்டி பயணிக்கும் காலத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

ஏனைய சமூகங்கள் ஏற்கனவே வெட்டப்பட்ட பாதையில் நீண்ட தூரம் சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும் கரடு முரடு இல்லாத பாதை. எமது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஓரிரு நல்லெண்ணம் படைத்த பெரும் தகைகளால் ஏதோ பயணம் தொடர்கிறது. கொழுந்து சஞ்சிகையை 31 ஆவது இதழ் வரை  20க்கும் மேற்பட்ட வருடங்கள் தனிமனிதனாக இருந்து முன் எடுப்பது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X