2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எசல பெரஹரா நிறைவு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

2010 ஆம் ஆண்டு கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவத நிலமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை மாலை அறிவித்தார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது இவ்வருடம் வரலாற்று முக்கியம் வாய்ந்த எசல பெரஹராவில் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கும் பாடசாலை மானவர்களுக்கும் பெரஹராவை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவியளித்தவர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

நாட்டை மன்னர்கள் ஆட்சி செய்த காலம் தொட்டு பெரஹரா முடிவுற்றபின் அது வெற்றிகரமாக முடிவுபெற்றதாக நாட்டின் அரசருக்கு உத்தியோகபூர்வமாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவத நிலமே அறிவிப்பது வழக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X