Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
நுவரெலியா, பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் கடத்த முற்பட்ட சம்பவத்தைத் தட்டிக் கேட்டவர்களின் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மின் உற்பத்தித்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரை ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் நோர்வூட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டதன் பின்பு குறிப்பிட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தலைவர் விசுவநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தித் திட்டத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட உள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த ஜுலை 12 ஆம் திகதி இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கேர்க்கல்ஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்டத்திலிருந்து பிரதான பாதையின் ஊடாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது பொகவந்தலாவை நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கேர்க்கஸ்வோல்ட் தோட்ட மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிகின்ற பலாங்கொடை பிரதேசத்தைச்சேர்ந்த நபரொருவர் அந்த மாணவியின் கையைப் பிடித்து இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது அந்த மாணவி கூக்குரலிட்டுள்ளார் இதனைச் செவிமடுத்த அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு குறிப்பிட்ட நபரைப் பிடித்துள்ளனர்.
இந்தச்சம்பவத்தைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் பெருந்திரளாக திரண்டதோடு, தொழிலுக்குச் செல்லவும் மறுப்புத் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்பு சந்தேக நபரை கைது செய்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட நபரைத் தாக்கிய தோட்ட மக்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நோர்வூட் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகைய நடவடிக்கைகளின் ஒன்றாகவே இந்தத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago