Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையில் முன்னெப்போதும் காணப்படாத மிகச்சிறிய, நவீனரக கையடக்கக் கைத்துப்பாக்கி ஒன்றை அலவத்துகொடை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதுடன் இது தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை முப்படையினரோ எல்.ரி.ரி.ஈ அமைப்போ அல்லது வேறு குழுக்களோ பாவிக்காத சுமார் 3 - 4 அங்குல நீளத்தையுடைய இக்கைத்துப்பாக்கி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அலவத்துகொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொடைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அக்குறணை துனுவில என்ற இடத்தில் ஒருவரைக் கைது செய்தபோது அவர் இடைத் தரகராகத் தொழிற்பட்டு கலகெதரையைச் சேர்ந்த ஒருவருக்கு அதை விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
தற்போது சிரையில் இருக்கும் ஒருவர், கம்பஹா பகுதியிலுள்ள மற்றொருவர் மூலமே இவ்வியாபாரத்தை ஒழுங்குபடுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது பாதாளக் குழுக்களின் நடவடிக்கையாகும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனார். மேலதிக விசாரனைகள் இடம்பெறுகின்றன.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago