2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அனைத்து மாணவர்களுக்கு சமமான கல்வி வழங்கும் வகையில் கல்வித் திட்டத்தில் மாற்றம் வரும்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்குடன், அடுத்த வருடத்திலிருந்து தேசிய கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கண்டி கட்டுகஸ்தோட்டை கல்வி வலையத்துக்குட்பட்ட நுகவெல மத்திய கல்லூரியில் நடைபெற்ற 66 ஆவது பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கல்விக்கு பெரும் சேவையாற்றிய சீ.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர இந்நாட்டின் மத்திய கல்லூரி முறையை அறிமுகப்படுத்தியது நாட்டின் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கேயாகும். அண்மைய காலம் வரைக்கும் இந்நாட்டு மத்திய கல்லூரிகளிலிருந்து பெரும் கல்விமான்கள், அறிவாளிகள் உருவானார்கள. ஆனாலும் மத்திய கல்லூரிகளில் கல்வி கற்றவர்கள் உயர் பதவிகளுக்கு சென்றவுடன் தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்பிக்கின்றனர். இது ஏன் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. அதை திருத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டே எமது தேசிய கல்வி திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் பாரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம். இம்மாறறம் உயர்மட்டத்திலுள்ள சிலருக்கு பாதிப்புகளை விளைவித்தாலும் பிள்ளைகளின் நலனை கருதி இது நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்கான சட்டமூலமொன்று  வெகு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப வேலைகள் தற்போது நடைபெறுகின்றன. இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை நாட்டில் 1000 பாடசாலைகளை வளங்கள் நிரந்தர பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X