2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பெருந்தொகையான கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடத்திய சோதனை ஒன்றின் போது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மில்லி கிராம் கஞ்சா போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவை சேர்ந்த இச் சந்தேக நபர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கண்டி பிரதான நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.பீ தியகெலினாவல தலமையில் இச்சோதனை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .