2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அக்கரப்பத்தனை டயகமவில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம மேற்கு பிரிவு 5ஆம் இலக்க தோட்டத்திலுள்ள ஆற்றின் பிரதான பாலத்துக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை டயகம பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டயகம தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான செங்கோடன் வரதன் ( வயது 57 ) என்பவர் ஆவார்.

இவரது  சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .