Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவைப் பிரதேசத்தில் உறவினர்களின் துன்புறுத்தலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒன்பது வயது சிறுவன் நீதிவானின் உத்தரவுக்கேற்ப டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டு வாழுகின்ற நிலையில் இந்தச் சிறுவனின் தாய் கொழும்பில் தொழில் புரிகின்றார். இந்தச் சிறுவன் உறவினர் வீடொன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அந்த உறவினர்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. இந்த துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவன் நேற்று புதன்கிழமை வீட்டை விட்டு பொகவந்தலாவையிலிருந்து ஹட்டனுக்கு சென்று, அங்கிருந்து நபரொருவரின் உதவியுடன் தலவாக்கலை செல்லும் பஸ் ஒன்றில் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சிறுவனின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பஸ் சாரதி, அந்தச் சிறுவனை ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் உள்ள பொலிஸ் காவலரண் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹட்டன் பொலிஸார் சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு ஹட்டன் நீதிவான் முன்னிலையில் அச்சிறுவனை ஆஜர்படுத்தியுள்ளனர். இந்தச் சிறுவனின் உடம்பில் தீக்காயங்கள் காணப்பட்டதால் அந்தச் சிறுவனை வைத்தியசாலை அனுமதித்து சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
25 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago