2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                        (எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் காணப்படுகின்றது. இதனால்  ஹட்டன்- நுவரெலியா மற்றும் நுவரெலியா-புசல்லாவை  ஆகிய பிரதான பாதைகளில் வாகனம் செலுத்துகின்றவர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ கோரியுள்ளார்.

இதேவேளை, மலையகத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் அடைமழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .