2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்தியா உதவும்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எம்.எஸ்.குவால்தீன்)

இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என உதவி இந்தியத் தூதுவர் ஆர்.கே. மிஸ்ரா கூறினார்.

மகாத்மா காந்தியின் 141 ஆவது ஜனன தினம் இன்று  சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு கண்டியில் உள்ள  இந்திய உதவித் உயர்ஸ்தானிகராலயம், மாத்தளை மாவட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியது.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்  ஏற்பாடு செயயப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய உதவித் தூதுவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்டத்தின் 33 தமிழ்மொழி மூல பாடசாலைகளைச் சேர்ந்த 560 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 15 பாடசாலைகளின் நூலகங்களுக்கு கணினி அறிவு சம்பந்தமான நூல்களும் வழங்கப்பட்டன.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X