2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி கடத்தப்பட்டதாக பொலிஸில் புகார்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அலவத்துகொடை நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடத்தப்பட்டள்ளதாக அலவத்துகொடை பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அலவத்துகொடை நகரை அண்மித்த பிரதேசத்தில் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கர வண்டியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தமது முச்சக்கர வண்டியை பாதையோரத்தில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்ற 15 நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த பொழுது வண்டி கடத்தப்பட்டிருந்ததாக அம்முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்   இது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X