2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நானுஓயாவில் மண்சரிவு; வாகன போக்குவரத்துகளுக்கு தடை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுவர்ணஸ்ரீ, குவால்தீன்)

நானுஓயா – தலவாக்கலை மற்றும் கண்டி - கபரகலை பிரதான வீதிகளில் இன்று அதிகாலை முதல் பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. நானுஓயா – தலவாக்கலை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாகவும் கண்டி - கபரகலை பிரதான வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையினாலுமே இந்த போக்குவரத்து த்டை ஏற்பட்டுள்ளது.

 

 

நானுஓயா – தலவாக்கலை பிரதான பாதையில் பிளக்போர்ட் தோட்டத்துக்கு அருகில் இன்று காலையில் பாரிய ண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதால் வாகனப்போக்குவரத்துகளுக்குத் தற்போது தடை ஏற்பட்டுள்ளது.

எனினும் தற்போது மண்திட்டினை அகற்றும் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருப்பதால் இன்னும் சில மணி நேரத்துக்கள் வாகனப் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்புமென நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வல்பொல தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு பெய்த கடும் மழையினால் கண்டி - கபரகலை பிரதான பாதையின் ஹந்தல எனும் இடத்தில் பாரிய பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக கபரகலை, பம்பரகலை, கோமர, படுல்கம ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் போக்கவரத்துக்கள் பாதிக்கபட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பரத்தினை அகற்றி பாதையை சீர் செய்யும் நடவடிக்கையில் பன்வில பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X