2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சர்வதேச ஒலிம்பியாட் கணித விஞ்ஞானப் போட்டிக்கு ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன் தெரிவு

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தன் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இப்போட்டி நிகழ்ச்சி இந்தோனேசியாவில் நாளை 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கணிதம் மற்றும் விஞ்ஞான கல்விப் பிரிவில் நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பாடசாலை மாணவர்களுள் அருள்மொழிவர்மன் திஷாந்தனும் ஒருவராவார்.

இவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கணித  விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கும் தெரிவானவராவார்.

திஷாந்தன் இந்தோனேசியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதிக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்கு ஏற்படும் செலவுகளை இலங்கை இந்திய சமுதாய பேரவை ஏற்றுக் கொண்டு அதற்கான பணத்தை வழங்கி அவரை பாராட்டியுள்ளது.

இப்பாராட்டு வைபவமும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் தலைமைப் பணிமனையில் இடம் பெற்றது.

இப்பாராட்டு நிகழ்வில் பேரவையின் பிரதித் தலைவர் முத்துசாமி, பேரவையின் செயற்றிட்டத் தலைவர் கே. கருணாகரன், கந்தசாமி செல்லகுமார், வைத்திய கலாநிதி ராமசுப்பு, பேரவையின் செயலாளர் தேவராஜ் உட்பட பலரும் பங்குபற்றினர்.

இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சார்பில் பண முடிப்பை பிரதித் தலைவர் முத்துசாமி  அருள்மொழிவர்மன் திஷாந்தனிடம் வழங்கினார்.

இதேவேளை திஷாந்தனுக்கு இப்போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்ற இந்தோனேசியா செல்வதற்கான விமான போக்குவரத்து செலவீனத்தின் ஒரு பகுதியை மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா வழங்கி பாராட்டியுள்ளார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X