2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு வாள் வெட்டு; மனைவி, மகளின் கண்களில் மிளகாய்த்தூள் வீச்சு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

தலவாக்கலை, லிந்துலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த நபரொருவர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தரை வாளால் வெட்டி படுகாயங்களை ஏற்படுத்தியதுடன் அவரின் மனைவி மற்றும் மகளின் கண்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மதாஸ் ஜெகதீஸ்வரன் வயது (36) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை, மெரையா எனும் இடத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் வீட்டினுள் நுழைவதற்கு முன் வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்ததுடன் ஜன்னலை உடைத்து விட்டு உள்ளே நுழைந்ததாகவும் மூடியிருந்த அறைக்கதவை உடைத்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த தமது கணவரை தலை மற்றும் கழுத்து பகுதிகளில் வாளால் வெட்டியதாகவும் ஜெகதீஸ்வரனின் மனைவி தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

'அந்நபர் எனது கண்களிலும் எமது 6 வயதான மகளின் கண்களிலும் மிளகாய்த் தூளை தூவிவிட்டு தப்பிச் சென்றார்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X