Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 02 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.ராவின்)
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நியமனம் பெற்ற மலையக தமிழ் முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவருக்கும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு மீள நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.
2007 ஆம் ஆண்டு, மலையக பாடசாலைகளில் 3,179 தமிழ் ஆசிரியர்கள் நியமனம் பெற்றார்கள். இதனடிப்படையில் பாடசாலை மட்டத்தில் சப்ரகமுவ மாகாண சபையும் மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து இந்த நியமனத்தை 2007 ஆம் ஆண்டு சுமார் 450 பேருக்கு வழங்கியது.
இதில் பல்வேறு குழறுபடிகள், மோசடிகள் இடம் பெற்றதாக கூறி நியமனம் பெற்ற அனைவரும் மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் வழங்கிய சான்றிதழ்கள், உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது 10க்கு மேற்பட்டவர்களுக்கு நியமனம் இடைநிறுத்தப்பட்டதுடன் நேர்முகப்பரீட்சைகள் நடத்திய மற்றும் நியமனம் வழங்கிய அதிகாரிகள் சிலரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
இதன் பின்னர் இந்த நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பபட்ட நிலையில் தகுதியில்லாதவர்கள் பலர் ஆசிரியர் நியமனம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு உரிய முறையில் தயார் செய்யப்பட்ட நியமனக் கடிதங்களை சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு வழங்கவுள்ளதாக தெரிவிக்கின்றது.
இடை நிறுத்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு மீள நியமனம் வழங்கபட வேண்டுமென கோரி, நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர்களும் தமக்கு மீள ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென சப்ரகமுவ மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago