2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மகாராணியின் கட்டியக் கோல்' கண்டிக்கு எடுத்துவரப்பட்டது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் தீச் சுடர் (மகாராணியின் கட்டியக் கோல்) கண்டிக்குக் கொண்டு வரப்பட்டது.

ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் 20 ஆவது விளையாட்டுப் போட்டி தொடர்பான எலிசபெத் மகாராணியின்  கட்டியக் கோலே கண்டிக்குக் கொண்டு நேற்று எடுத்துவரப்பட்டுள்ளது.

இவ் விளையாட்டுப் போட்டி நடைபெறும் தினத்திற்கு  248 தினங்களுக்கு முன்பிருந்தே  பொது நலவாய அங்கத்துவ நாடுகளுக்கும் இந்த கட்டியக்கோல் எடுத்துச் செல்லப் படுகிறது.

கண்டிக்குக் கொண்டு வரப்பட்ட கட்டியக்கோல் தாங்கிய விசேட பேழை கண்டி ஸ்ரீதலதா மாளிகை உட்பட சர்வ மத ஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பாக இடம் பெற்ற வைபவங்களில் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, மத்திய மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .