2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலையக வீதிகளை சீரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


சீரற்று காணப்படும் மலையகத்தின் பிரதான வீதிகளை சீர்த்திருத்தித் தருமாறு கோரி ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஹட்டனிலிருந்து பிரதான நகரங்களுக்குச் செல்லும் பல வீதிகளில் பல மணி நேரங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது. 

ஹட்டன் - பொகவந்தலாவ, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் - சாமிமலை, ஹட்டன் - பலாங்கொடை போன்ற பிரதான வீதிகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் அவ்வீதிகளையும் நோர்வூட் நகரத்தையும் சீர்திருத்தி தருமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை (21) காலை நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், வாகன சாரதிகள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • V. Jeeva Monday, 21 October 2013 08:04 AM

    வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .