2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மனித எலும்புகளை வெளிநாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை வைத்தியசாலையின் வளாகத்தில் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

எலும்புகளின் காலத்தை கண்டறிவதற்காகவே இவை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவிருகின்றது.

இந்த வளாகத்திலிருந்து 157 எலும்பு கூடுகளுக்கான எலும்புகள் மீட்கப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு எலும்பு கூடுகளுக்கான எலும்புகளையே குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவிடம் கையளிக்குமாறு மாத்தளை நீதவான் சம்பத் கமகே மாத்தளை நீதிமன்ற வைத்திய அதிகாரி வைத்திய அஜித் ஜயசேகரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு கட்டிடமொன்ற நிர்மாணிப்பதற்காக அத்திபாரம் வெட்டுகின்றபோது 2012 ஆம் ஆண்டு 23 ஆம் திகதி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புகள் 1988/1989 ஆம் ஆண்டு காலத்தில் காணாமல் போனவர்களின் எலும்புகளாக இருக்கலாம் என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .