2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹலாலை ஒழிக்கும் வரை போராடுவோம்: பொதுபல சேனா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை பொதுபல கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இன்று நடத்தியதுடன் ஹலாலை ஒழிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர போவதாகவும் எச்சரித்துள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வாகன ஊர்வலமாக வந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மாலை ஒன்றுகூடினர்.

பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் அதன் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உற்பட தேரர்கள் மற்றும் பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர்,

ஹலால் நடைமுறை சம்பந்தமாக கடந்த காலத்தில் நாங்கள் ஒரு தீர்வு வழங்கப்பட்டிருந்தது. ஜம்மியதுல் உலமா சபையும் இலங்கை வர்த்தக சபையும் ஹலால் சம்பந்தமாக எங்களுக்கு தீர்வு ஒன்றை தந்தது. ஆனாலும் அவர்கள் அதனை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். இம்முறை ஹலால் இலட்சினை மட்டுமல்ல ஹலால் முறையையே முடிவுக்கு கொண்டுவரும் வரை நாங்கள் போராடுவோம்.

இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமல்ல. ஹலாலை தடை செய்ய கூறும் போராட்டமும் அல்ல. முஸ்லிம்கள் ஹலால் உணவுகளை சாப்பிடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனாலும் சிங்கள ,இந்து மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கு ஹலால் தேவை இல்லை. அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது. ஹலாலை முடிவுக்கு கொண்டு வருவதாக அரச தரப்பில் எங்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் அரசு அதனை கண்காணிக்க வில்லை. இன்று ஹலால் நடைமுறை பல வடிவங்களில் மிகவும் வேகமாக அமுல்படுத்தப்படுகிறது. அதனை எதிர்த்தே நாங்கள் மீண்டும் களம் இறங்கியுள்ளோம்.

இன்று எங்களுக்கு ஒரு உறுதியான சமய தலைமத்துவம் தேவை. பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது. ஆகவே அனைத்து பீடங்களையும் இனைணத்த ஒரு 'சங்கராஜர்' ( மதத்தலைவர்) ஒருவர் தேவை.அதனை உருவாக்குவதற்கும் இன்று நாம் தலதா மாளிகைக்கு முன் உறுதிகொள்கின்றோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.






  Comments - 0

  • fowmy Wednesday, 23 October 2013 12:26 AM

    மறு படியும் வேதாளம் புறப்பட்டு விட்டது

    Reply : 0       0

    amr Wednesday, 23 October 2013 04:50 AM

    மாமிசம் உண்ண முடியாது என்பது மார்க்க அனுஷ்டானமாக இருக்குமானால் - ஏன் அதனை அலட்டிக்கொள்கிறீர்கள்? மாமிசம் உண்ண அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவா அதனைப் பேசவேண்டியவர்கள் - உங்களுக்கு சாப்பிடத் தடை ஹலால் மாமிசம் அல்ல மாற்றமாக மாமிசமே புரிகிறதா?

    Reply : 0       0

    Ashraff Wednesday, 23 October 2013 06:18 AM

    எமது நாடு விபசார நாடாக மாறப் போகின்றது... இது சம்பந்தமாக உங்களின் நடவடிக்கை.... எப்போது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .