2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மஸ்கெலியாவில் ஒருவர் வெட்டிக்கொலை: இரண்டாந்தாரத்திற்கும் காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


மஸ்கெலியா,குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியும் இரண்டாந்தாரமும் கடுங்காயங்களுடன் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதான அரவாண்டி மருதவீரன் மரணமடைந்துள்ளார். அவரது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையான குறித்த நபர் அதே தோட்டத்தைச்சேர்ந்த பெண்ணொருவரை இரண்டாம் தாரமாக கூட்டிக்கொண்டு வந்துவிட்டார் என்றும் அந்த பெண்ணின் தந்தையே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடி விட்டதாக தெரிவித்த பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .