2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆசிரியர் தாக்கி அதிபர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில்  இடம் பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை வளாகத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அதிபர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதேவேளை, அதிபரை தாக்கியதாக கூறப்படும்  ஆசிரியர் இன்று விடுமுறை பெற்று சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .