2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மதுபானத்துடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபானப் போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு சென்றதாகக் கூறப்படும் இருவரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வட்டவளை, ரொசல்ல பகுதியிலிருந்து டெம்பெல்ஸ்டோ தோட்டப்  பகுதிக்கு மேற்படி மதுபானப் போத்தல்களை கொண்டு சென்றபோதே நேற்று திங்கட்கிழமை இரவு இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிஸார் மேற்படி முச்சக்கரவண்டியின்  சாரதியை விசாரணை செய்தபோது, முச்சக்கரவண்டியில் 150 மதுபானப் போத்தல்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .