2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா கொத்மலை  கல்வி வலயத்திற்கு உட்பட்ட வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்  சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிசாரினால் இன்;று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறும் கோரி மாணவர்களும் பெற்றோரும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

கொத்மலை  கல்விவலய கல்விப் பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று சுமூக பேச்சுவார்த்தையின் பின்னர் அதிபர் உட்பட ஆசிரியரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் வேலை நிருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனையடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .