2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டிப்ளோமா பயிற்சி நெறி வேலைத்திட்டம் ஆரம்பம்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா ரோட்டறி கழகத்தின் எற்பாட்டில் 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறி வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா சௌமிய கலையரங்கத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க,மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம்,நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சர்வதேச ரோட்டறி மாவட்டம் இதற்காக 3.5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ரோட்டறி மாவட்டமும் நுவரெலியா ரோட்டறி கழகமும் ஏற்பாடுசெய்துள்ளது.

பதுளையில் இருந்து 40 பேரும்,மொனராகலையில் இருந்து 40 பேரும்,ஹட்டனில் இருந்து 40 பேரும்,நுவரெலியாவில் இருந்து 80 பேருமாக 200 பேர் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறி இலவசமாக வழங்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேசங்களிலும் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.பயிற்சிகளை காமினி திசாநாயக்க தனியார் பாடசாலை வழங்கவுள்ளது.இவர்கள் அனைவருக்ககும் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .