2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 800ஆக அதிகரிக்கவும்

Sudharshini   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமான 450 ரூபாவை, 800 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை வேண்டும் என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். 

இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இராமலிங்கம் சந்திரசேகரன், தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாள் சம்பளமாக 450 ரூபாய் வழங்கப்படுகின்றது. இத்தொகை 800 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X