2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பூண்டுலோயாவில் இரட்டைக்கொலை

Kanagaraj   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன், ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியா,பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் 52 வயது மதிக்கத்தக்க தாயும் 32 வயது மதிக்கத்தக்க மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நபரை தேடி வருவதாகவும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் ஆண்டி பேச்சாய்  (52) மற்றும் அவரது மகள் பெரியசாமி நித்தியகல்யாணி (32) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்தலத்துக்கு விஜயம் செய்த நாவலப்பிட்டிய நீதிமன்ற நீதவான் எல்.கே.மகிந்த சடலங்களை பார்வையிட்டதுடன், சடலங்களை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  நுவரெலியா பொலிஸ் நிலைய உதவி காவல் துறை அத்தியட்சகர் ஜி.விமலதாச தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .