2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பதில் உப-தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள உப தபால் நிலையங்களில் பல வருடங்களாக பதில்
உப -தபால் அதிபர்களாகப் பதவி வகித்து வந்த 720 பேரையும் நிரந்தரமாக்கும் திட்டம் ஒன்றை  தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முதற்கட்டமாக கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பதில் உப தபால் அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள்; வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) கண்டி தபால் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .