2025 ஜூலை 09, புதன்கிழமை

சமன் தெய்வம் ரஜமகாவிகாரையில் பிரதிஷ்டை

Sudharshini   / 2015 மே 06 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலையின் உச்சியிலிருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்களை, நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த தளபதியும் 30 இராணுவ சிப்பாய்களும் நல்லதண்ணி நகரிலுள்ள விகாரைக்கு நேற்று (05) எடுத்து வந்தனர்.

இன்று காலை (06) 7.15 மணி வரை இடம்பெற்ற  பிரித் ஓதும் நிகழ்வையடுத்து நல்லதண்ணி நகரின் வர்த்தகர்களால் பூஜை நடத்தப்பட்டது.

பூஜைகளை தொடர்ந்து சமன் தெய்வத்துடனான வாகன தொடரணி ஆரம்பமாகியது. இவ்வாகன தொடரணி நோட்டன் லக்சபான வழியாக கிதுல்கல, கரவனல்ல, யட்டியந்தோட்ட, தெகியோவிட்ட மற்றும் அவிசாவலை வழியாக இரத்தினபுரி கல்பொத்தவெல ரஜமகாவிகாரையை சென்றடையுமென சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தம்பதின்ன தேரர் தெரிவித்தார்.

அங்கு சமன் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மீண்டும் சிவனொளிபாதமலை பருவகாத்தில் எடுத்து வரப்படுமென அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நுவரெலிய அரச அதிபர், உதவி அரச அதிபர், அம்பகமுவ பிரதேச செயலாளர், ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி, நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராமசேவகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .