2025 ஜூலை 17, வியாழக்கிழமை

எல்பட தோட்டத்துக்கான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராசந்திரன்

அம்பகமுவ பிரதேசசபைக்குட்;பட்ட நோர்வூட் எல்பட தோட்டத்துக்கான பாதையை புனரமைத்துத்தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

நோர்வூட் நகரிலிருந்து அயரபி தோட்டத்தினூடாக போற்றி மற்றும் சின்ன எல்பட பெறிய எல்பட ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக காணப்படும் சுமார் பத்து கிலோ மீட்டர் தூமான இப்பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.  

கடந்த காலங்களில் குறித்த பாதையூடாக தனியார் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், பாதை சீரேகேடு காரணத்தால் இச்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களில் விபத்துக்களும் அதிகரித்து காணப்பட்டமை குறிப்;பிடதக்கது

வாடகை வாகன சேவையாளர்களும் குறித்த பாதையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாகனங்கள் இப்பாதையினூடாக பயணிப்பதால் உடைந்துவிடுவதாகவும் இதனால் தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல்வேறு தேவைகளுக்காக இப்பாதையை பயன்படுத்துபவர்கள் குறித்த பாதையில் பயணிக்கமுடியாத நிலையில் இரண்டு ஆடும் பாலம் பாதையூடாகவே நடந்து சென்று தமது தேவைகளை நிவர்த்திசெய்கின்றனர். ஆடு பாலமும் மழை காலங்களில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

எனவே நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படும் இப்பாதையை புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X